துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஹரிஷ் கல்யாண் .தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பொறியாளன், வில் அம்பு ,பியார் பிரேமா காதல் ,தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு போன்ற ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பாத்திற்கு டீசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது . மற்றொரு போஸ்டரில் பெட்ரோல் பங்க் நிலையத்தில் அதுல்யா ரவி உடன் ஹரிஸ் போஸ் கொடுத்துள்ளார்.