பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கடுவா திரைப்படம். இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன், கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்... இதற்கு முன்னதாக தான் இயக்கிய லூசிபர் படத்தின் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்கு விவேக் ஓபராயை அழைத்து வந்து வில்லனாக்கியவர் பிரித்விராஜ் தான். வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் விவேக் ஓபராய் பேசும்போது, “இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பயங்கரமாக இருந்தது. பிரித்விராஜை திறமையின் பவர் ஹவுஸ் என்று சொல்வேன். அவர் ஆடுகிறார், பாடுகிறார், நடிக்கிறார், படம் இயக்குகிறார், தயாரிப்பாளராக இருக்கிறார்.. என்ன வேலை தான் அவர் செய்யவில்லை..! படப்பிடிப்பில் எங்களை எல்லாம் மீறி ஏதாவது ஒரு விஷயம் செய்து அசத்தி விடுவார். அதுதான் எங்களை பயப்படுத்தும். அவ்வளவு ஏன் பெண் வேடம் போட்டால் சம்யுக்தாவின் கதாபாத்திரத்தை கூட அவரை நடித்து விடுவார்.. அவரை கேரளாவின் கமல்ஹாசன் என்று தான் நான் சொல்வேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.