தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அர்ஜூன் ரெட்டி படம் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா முழுக்க பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவரது நடிப்பில் லைகர் படம் உருவாகி வருகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கி, தயாரிக்க, அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். குத்துச் சண்டை தொடர்பான கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஒரு பூங்கொத்தை வைத்து மட்டும் மறைத்தபடி விஜய் தேவரகொண்டா உள்ளார். இந்த போஸ்டர் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தியில் சில ஆண்டுகளுக்கு முன் அமீர்கான் நடிப்பில் வெளியான பிகே படத்தின் போஸ்டர் ஒன்றும் இதே பாணியில் தான் வெளியானது. அப்போது அந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்தன. அதேபாணியில் இப்போது இந்த போஸ்டரை வெளியிட்டு மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர்.