சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் இன்னும் வைக்கப்படாத தலைப்புகள் எவ்வளவோ இருக்க, இதற்கு முன்பு வெளிவந்த பல படங்களின் தலைப்புகள் அடிக்கடி வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படத் தலைப்புகள்தான் வைக்கப்பட்டு வந்தன. இவர்களது பழைய படங்களைப் பற்றி இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால், இன்றைய ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த விஜய் படத் தலைப்புகளை அதற்குள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
பாலசேகரன் இயக்கத்தில், விஜய், சுவலட்சுமி நடித்து 1997ம் ஆண்டு வெளிவந்து 175 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் 'லவ் டுடே'. அத்தலைப்பை தற்போது ஒரு புதிய படத்திற்கு வைத்துள்ளார்கள். 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்குத்தான் அந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் இது குறித்து தங்களது கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் இன்று வெளியிட்டுள்ள 'லவ் டுடே' முதல் பார்வையில் கதாநாயகன் புகை பிடிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.