23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன். குஜராத்தி நடிகை சித்தி இட்னானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிம்புவின் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.