ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்தமாதம் சென்னையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். சென்னை ஈசிஆர்., சாலையில் கடற்கரை ஒட்டிய தனியார் ரெசார்ட்டில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போதே அவர்களின் திருமண போட்டோக்கள் வெளியாகி வைரலானது. தொடர்ந்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்ற இருவரும் தற்போது அவரவர் படங்களில் பிஸியாகி உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில் விக்கி நயன் ஒரு மாதம் அனிவர்சரி என்ற ஹேஷ்டாக்கை பகிர்ந்து அன்று திருமணத்தில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள் போட்டோவை விக்னேஷ் சிவன் இப்போது வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், மணிரத்னம், சூர்யா-ஜோதிகா, விஜய் சேதுபதி, இயக்குனர் அட்லீ உள்ளிட்டோர் தங்களை வாழ்த்திய போது எடுத்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அதிலும் ரஜினி மணமக்களுக்கு பரிசு பெட்டகத்தை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.