தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள கடுவா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி இடம் பெற்ற வசனங்கள் குறித்து மன்னிப்பு கேட்ட பிரித்விராஜ் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மீண்டும் அதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் நடிகர்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்குவது குறித்து சமீபகாலமாக மலையாள திரை உலகில் பேசப்பட்டு வரும் விஷயம் பற்றி பிரித்விராஜிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பிரித்விராஜ், தனக்கும் ஆண் - பெண் வித்தியாசம் இல்லாமல் ஊதியம் வழங்குவதில் உடன்பாடுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறினார். நான் மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தபோது தன்னைவிட படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராய் அதிக சம்பளம் வாங்கினார் என்று குறிப்பிட்ட பிரித்விராஜ், இந்த விஷயத்தில் நடிகர்களுக்கான ஊதியம் அவர்களது ஸ்டார் வேல்யூவை கணக்கில் கொண்டு தான் வழங்கப்படுகிறதே தவிர, அவர்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு காரணமாக இல்லை என்றும் கூறியுள்ளார்.