மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினாலும் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம், நடிகராக சினிமாவில் நுழைந்தவர் சித்தார்த். அதன்பிறகு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து மாறிமாறி நடித்து வந்த சித்தார்த், இரண்டிலுமே தன்னை தக்க வைத்துக்கொள்ள தற்போது வரை போராடி வருகிறார். இதற்கிடையே தனது மனைவியை விவாகரத்து செய்த சித்தார்த் அதன்பிறகு ஸ்ருதிஹாசன், சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்த போது காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.
சமீபத்தில் தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் என்கிற படத்தில் சித்தார்த்துடன் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்து நடித்திருந்தார் இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் இருந்து வெளியே வந்த அதிதி ராவ் அங்கே வந்த சித்தார்த்துடன் ஒரே காரில் ஏறி கிளம்பி சென்றுள்ளார். முன்னதாக இவர்கள் இருவரையும் அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சிக்க அதனால் கோபமான சித்தார்த், நேரம் வரும்போது நானே சொல்கிறேன்.. தயவுசெய்து புகைப்படம் எடுக்காதீர்கள்” என்று அவர்களிடம் கெஞ்சி கேட்டபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார். இதன் மூலம் சித்தார்த்தும் அதிதியும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களோ என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.