தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்று அப்பாவின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று நலமான டி.ராஜேந்தர் அமெரிக்காவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் மனைவி உஷா, மகன் குறளரசன் ஆகியோர் உடனிருந்து கவனித்து கொண்டனர்.
இந்நிலையில் முழுமையாக குணமாகி நாளை(ஜூலை 22) அதிகாலை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர். பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும் கால்டுவெல் ஆகியோர் டி.ராஜேந்தரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மகன் குறளரசன், மகள் இலக்கியா உள்ளிட்ட குடும்பத்தாரும் அவருடன் நாடு திரும்புகின்றனர்.
சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி கூறுகிறார் டி.ராஜந்தர்.