துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2017ல் ஆரம்பமான படம் 'துருவ நட்சத்திரம்'. படம் ஆரம்பமாவதற்கு முன்பே டீசரை எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், படம் ஆரம்பமாகி ஐந்து வருடங்களாகியும் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சம்மதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே இயக்குனர் கவுதம் மேனன், விக்ரம் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு, “விரைவில் நட்சத்திரங்கள் சீரமைக்கப்படும்,” எனப் பதிவிட்டுள்ளார் கவுதம்.
நீண்ட காலமாக கிடப்பில் இருந்த 'துருவ நட்சத்திரம்' படம் விரைவில் ஒளி வீசும் என ரசிகர்கள் மகிழ்ந்துள்ளார்கள். விக்ரம் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துடன் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் சேர்த்து நடித்துக் கொடுப்பார் எனத் தெரிகிறது.