சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த பரபரப்பு வருமான வரித்துறை ரெய்டு. தமிழ் சினிமாவில் இன்று உருவாகும் பெரும்பாலான படங்களில் தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச் செழியனின் பணம் இருக்கும். அவரிடம் பணம் பெற்றே முன்னணி நடிகர்கள் கூட படங்கள் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் வருமானத்தை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் படி கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களின் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
குறிப்பாக தயாரிப்பாளர் அன்புசெழியன், அவரது சகோதரர் அழகர், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, பிரின்ஸ் பிக்சர் லக்ஷ்மன். ராஜ்கமல் பிலிம்ஸ் மகேந்திரன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், விநியோகஸ்தர் அருள்பதி, பைனான்சியர் ஜஷ்வந்த்., ஜெமினி லேப் ரவி, பிரசாத் லேப் போன்றவர்கள் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. நான்கு நாட்களாக நீடித்த இந்த ரெய்டு முடிந்துள்ளது. இவர்களின் வீடு அலுவலகங்களில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற விபரம் இனிமேல் தான் தெரிய வரும்.