துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர் . இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க 99% வாய்ப்பு உள்ளதாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், ‛‛ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் ஹாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பல முக்கிய ஹாலிவுட் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இப்படத்தில் உள்ள அதிரடி சண்டை காட்சிகள் மட்டும் நாட்டு நாடு பாடலில் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஹாலிவுட்டில் ஒவ்வொரு நாளும் இந்த படத்தைப் பற்றிய பேச்சு அதிகரித்து வருவதால் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டால் முதல் இந்திய திரைப்படமாக தேர்வாகும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்திய நடுவர் குழு இப்படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்தால் 99% வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு ஹாலிவுட்டில் உள்ள அனைவரும் இப்படத்தை பற்றியும், அதன் காட்சிகளை பற்றியும் பேசுகிறார்கள்'' என்று தெரிவித்திருக்கிறார் அனுராக்.