பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
‛விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன். குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நடிகர் கமல்ஹாசனை படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.