சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிளாக் ஷீப் என்கிற இணையதள சேனலில் யூ-டியூபராக இருந்து பின்னர் சின்னத்திரை தொகுப்பாளராகி, சினிமாவில் காமெடி நடிகர் ஆனவர் விக்னேஷ்காந்த். மீசைய முறுக்கு, தேவ், நட்பே துணை, மெஹந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, களவாணி 2 மற்றும் இக்லூ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விக்னேஷ்காந்திற்கும் என்ஜினீயர் ராஜாத்திக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ராஜாத்தி விக்னேஷ்காந்தின் உறவுப் பெண். இது பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம். இந்த நிலையில் நேற்று திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் விக்னேஷ்காந்த், ராஜாத்தி திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
விக்னேஷ்காந்தின் நெருங்கிய நண்பர் மற்றும் பக்கத்து ஊர்காரர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனால் சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி சென்று திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த விக்னேஷ் திட்டமிட்டிருக்கிறார்.