தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஒரு காலத்தில் நடிகைகள் திரைப்படங்களில் அணியும் சேலைகள், பிளவுசுகள், நகைகள் வெளிச்சந்தையில் பிரபலமாகும். சரோஜாதேவி அணிந்த சேலைகள் சரோஜா சேலைகள் என்றே விற்கப்பட்டது, அதன்பிறகு நதியா கம்மல், நதியா வளையல் பிரபலமானது, சின்னத்திரையின் வளர்ச்சிக்கு பிறகு குஷ்பு ஜாக்கெட் பிரபலமானது. அந்த வரிசையில் தற்போது வருகிறது பொன்னியின் செல்வனின் சோழா நகைகள்.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷா, நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நிறைய நகைகள் அணிந்து நடித்துள்ளனர். அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் நிறைய நகைகள் அணிந்து கொள்வது அன்றைய வழக்கமாக இருந்ததால் படத்திலும் அந்த காட்சிகள் இடம்பெறுகிறது. இருவருமே சுமார் 2 கிலோ நகைகள் அணிந்து நடித்திருக்கிறார்கள்.
இந்த நகைகள், சோழர் காலத்தில் இருந்த நகைகள் குறித்து கல்வெட்டிலும், சிற்பங்களிலும் ஆய்வு செய்து நிஜமான நகை கலைஞர்கள் உருவாக்கியவை, ஒரு சில நகைகள் தங்கத்திலும், ஒரு சில நகைகள் ஐம்பொன்னிலும், மற்ற நகைகள் கவரிங் நகை முறையிலும் செய்யப்பட்டவை.
தற்போது இந்த நகைகளின் பாணியில் தங்க நகைகளை விற்க நகைக்கடைகள் தீவிரம் காட்டுகிறது. இந்தியா முழுக்க பரவியிருக்கும் முன்னணி நகை கடை நிறுவனம் ஒன்று 'தி சோழாக் என்ற பெயரில் இதனை தொடங்கி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகளை ஏலம் விட படத் தயாரிப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் புடவைகள் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.