மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்து பத்து நாட்களுக்கு முன்பு வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வந்த நிலையில் படம் வெற்றி என படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கடந்த வாரம் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உறுதியாக அறிவித்தார்.
இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் குறைந்த நிலையில் படத்தின் சக்சஸ் பார்ட்டியைக் கொண்டாடியிருக்கிறது படக்குழு. அதில் சிலம்பரசன், கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினரும் சிறப்பு அழைப்பாளர்களாக சில சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிம்பு படத்தின் சக்சஸ் பார்ட்டியில் சிவகார்த்திகேயன் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்காக அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்புவுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரையும், இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஓரிரு லட்சம் மதிப்புள்ள பைக்கையும் பரிசாக அளித்துள்ளார்.