சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 28 ஆம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடைபெற்றது .
இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாத இப்படத்தின் ஓடிடி உரிமையை அதற்குள் அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். சுமார் ரூ.38 கோடிக்கு விலைபோய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.