'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'துணிவு'. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது கிளைமாக்ஸ் மற்றும் ஆக் ஷன் காட்சிக்காக படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள் . மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் பல கோடிகளுக்கு கைப்பற்றியுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது .