சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வந்த பாவனா திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். மலையாளத்தில், என்ற காக்காக்கொரு பிரமண்டார்னு என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இது தவிர இரண்டு கன்னட படங்களிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டது. அதாவது அந்த உடையில் பாவனா ஆடைக்கு உள்ளே எந்த உடையும் அணியவில்லை என்று பலரும் கமெண்ட் கொடுத்து மோசமாக விமர்சித்தார்கள்.
அதையடுத்து அதற்கு பாவனா சோசியல் மீடியாவில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், என்னுடைய சருமத்தின் நிறத்தில் நான் ஆடை அணிந்திருந்தேன். இதுபோன்ற உடைகளை பயன்படுத்தும் நபர்களுக்கு அதன் உண்மை தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி என்னை விமர்சிப்பதன் மூலம் என்னை இவர்கள் மீண்டும் இருளுக்குள் தள்ளுவதை உணர்கிறேன். இது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் தான் அவர்கள் மகிழ்ச்சி காண விரும்புகிறார்கள் என்றால் நான் அதை தடுக்கவில்லை என்றும் ஒரு பதிவு போட்டு உள்ளார் பாவனா.