ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மஹா மூவிஸ் சார்பில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் படம் 'சபரி'. வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி, சுனைனா, ராஜ்ஸ்ரீ நாயர், மதுநந்தன் உள்பட பலர் நடிக்கிறார்கள், கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கொடைக்கானில் மும்முரமாக நடந்து வருகிறது.
படம் பற்றி இயக்குனுர் அனில் கட்ஸ் கூறியதாவது: படத்தின் ஒரு பாடல், க்ளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் படமாக்கியுள்ளோம். சுசித்ரா சந்திரபோஸ் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இதுமட்டுமல்லாது, நந்து- நூர் இயக்கியுள்ள சண்டை காட்சிகளை இங்கு படமாக்கினோம். இதற்கடுத்து விசாகப்பட்டினம் ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது.
படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை. இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது. என்கிறார் அனில் கட்ஸ்.