மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இடைவிடாத பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்குள்ள மீடியாக்கள் அவரிடத்தில் ஷாருக்கானுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு மணிரத்னம் பதிலளிக்கையில், ஷாருக்கானுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் அமையும் போது மட்டுமே அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதோடு என்னை பொருத்தவரை ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிய பிறகு அதற்கு உரிய நடிகர் நடிகைகளை தேர்வு செய்வேன். நடிகர்களை கருத்தில் கொண்டு கதைகளை உருவாக்குவதில்லை என்று கூறியுள்ளார் மணிரத்னம்.