23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியிடப்பட்டது. 100 மில்லியன் பார்வைகளை ஐந்து மொழிகளில் கடந்தாலும் டீசருக்கு கடுமையான விமர்சனங்களும், கிண்டல்களும் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் டீசர் மீதான கிண்டல்களுக்கு ஓம் ராவத் காட்டமாக பதிலளித்துள்ளார். அதில், “ஆதி புருஷ்' படம் பெரிய திரைக்காக எடுக்கப்பட்ட ஒரு படம். மொபைல் போனில் பார்ப்பதற்காக அனைத்தையும் கொண்டு வர முடியாது. அந்த சூழ்நிலையை என்னால் கட்டுப்படுத்த முடியாது. எனக்கு ஒரு தேர்வு இருந்தால் யுடியூபில் எதையும் பதிவிட மாட்டேன். இருப்பினும் காலத்தின் தேவையாக அது இருக்கிறது. பரந்த அளவிலான மக்களைச் சென்றடைய அதைச்செய்ய வேண்டி இருக்கிறது.
உலக அளவில் என்னுடைய பார்ட்னர் ஆன டி சீரிஸ் பெரிய யுடியூப் சேனல் வைத்திருக்கிறார்கள். எப்போதாவது தியேட்டர்களுக்கு வருபவர்களும் இந்தப் படத்தைப் பார்க்க வர வேண்டும். முதியோர்கள், தொலை தூரத்தில் இருப்பவர்களை தியேட்டர்கள் பக்கம் வரவைக்க முடியவில்லை. அவர்களும் தியேட்டர்களுக்கு வந்து இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் இது 'ராமாயணம்',” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மும்பையில் இந்தப் படத்தின் 3டி வடிவ டீசர் பத்திரிகையாளர்களுக்குத் தியேட்டரில் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக ஐதராபாத்தில் உள்ள பத்திரிகையளார்களுக்கும் காட்ட உள்ளார்களாம்.