வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள கடற்கரை ஒன்றில் பிரம்மாண்டமாய் இவர்களது திருமணம் நடந்தது. தொடர்ந்து ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதியர் திடீரென தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி குழந்தைகளின் பாதங்களில் முத்தமிட்டு மகிழும் போட்டோவை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு : ‛‛நயன்தாராவும், நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசீர்வாதமும் தேவை. உயிர் மற்றும் உலகம்'' என தெரிவித்துள்ளார்.
வாடகைத்தாய் மூலம் இந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ரசிகர்களும், திரையுலகினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.