திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் கடந்த 30ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்றுள்ள பெரிய பழு வேட்டரையர் வேடத்தில் நடிக்க தான் விருப்பம் தெரிவித்தாக கூறினார். அதைகேட்ட மணிரத்னம், அப்படி ஒரு வேடத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நான் விரும்பவில்லை என்பதற்காகவே அந்த இடத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து மணிரத்னத்தின் தளபதி படத்தில் நடித்தபோது நடைபெற்ற சில சம்பவங்களையும் அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு மணிரத்னம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை ரஜினிக்கும் பிடித்து விட்டதால் நடிக்க தயாராக இருப்பதாகவும் புதிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் தளபதி படத்தை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியும் மணிரத்னமும் இணையப் போகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு ரஜினி - மணிரத்னம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.