‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அடுத்ததாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த ரகுல் பிரீத் சிங் இந்தியன்-2 படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் தெலுங்கிலும் கூட மிகப்பெரிய இடைவெளி விட்டுள்ள ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் அவருடன் ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி தான்.
இந்த நிலையில் பாலிவுட்டில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படுவது இவர்கள் இருவரின் திருமணம் தான். இதுகுறித்து அவர்கள் இருவரும் எதுவும் வாய் திறக்காத நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் இதுபற்றி கூறும்போது, ‛‛எந்த ஒரு காதல் உறவுக்கும் இனிமையான முடிவு என்பது திருமணம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2023ல் அவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அது எப்போது என்பதை உரிய நேரம் வரும்போது ரகுல் பிரீத் சிங் தான் அறிவிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.