ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் திலீப், ராதிகா, பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ராம்லீலா. நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு திலீப் சிறையில் இருந்த சமயத்தில் வெளியான இந்தப்படம் சூப்பர்ஹிட்டாகி 100 கோடி வசூலை தொட்டது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அருண்கோபியின் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் திலீப். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை தமன்னா.
அதுமட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் கபாலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து தற்போது தமிழில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் ஈஸ்வரி ராவ் மற்றும் நகைச்சுவை நடிகரான விடிவி கணேஷ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். திலீப்பின் படங்கள் இதுவரை தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகாத நிலையில் தனது படங்களை தென்னிந்திய அளவில் கொண்டு செல்லும் விதமாக இப்படி தென்னிந்திய நட்சத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளனர் திலீப்பும் இயக்குனர் அருண் கோபியும்.