தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் மிக சிலரே. அந்த வகையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற இவர் கதாநாயகியாக நடித்த, மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. அதை தொடர்ந்து தற்போது தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். இதுகுறித்த அறிவிப்பை பிரியா பவானி சங்கர் போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர் படக்குழுவினர். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்செயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தவிர இன்னும் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.