தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நானி நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'தசரா'. ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். ஶ்ரீகாந்த ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தெலுங்கில் தயாராகும் இந்த படம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. படத்தின் நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் தோற்றமும் கேரக்டரின் 'வென்னலா' என்ற பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. தசாரா திருவிழாவில் கீர்த்தி சுரேஷ் உற்சாக நடனமாடுவது போன்று இந்த கேரக்டர் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படம் தவிர போலோ சங்கர் என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மகாநடி படத்திற்கு தேசிய விருது வாங்கியதற்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. மகேஷ் பாபுவுடன் நடித்த 'சர்காரு வாரிபட்டாக' படம் மட்டுமே அவருக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை கீர்த்தி ஆவலாக எதிர்பார்க்கிறார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார்.