பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
தீபாவளியை முன்னிட்டு இந்த வருடம் கார்த்தி நடிக்கும் 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' ஆகிய படங்கள் நாளை மறுதினம் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளன. தமிழில் உருவாகியுள்ள இந்த இரண்டு படங்களும் தெலுங்கிலும் டப்பிங் ஆகி அதே பெயரில், அதே தினத்தில் வெளியாகின்றன.
'பிரின்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கி உள்ளார். தெலுங்கு படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் ஹரிஷ் சங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று 'சர்தார்' தெலுங்கு படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில் நடிகர் நாகார்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். 'தோழா' படத்தில் நாகார்ஜுனா, கார்த்தி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழில் மோதிக் கொள்ளும் 'சர்தார், பிரின்ஸ்' படங்கள் தெலுங்கிலும் மோதிக் கொள்கின்றன. கார்த்திக்கு தெலுங்கில் ஏற்கெனவே நல்ல அறிமுகம் உண்டு. சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகின்றன. இரண்டு மொழிகளிலும் இந்தப் படங்கள் எப்படி வரவேற்பைப் பெறப் போகின்றன என்பதைப் பார்க்க ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.