ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 |
தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள், முக்கிய படங்கள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் வாங்கி வெளியிடுகிறது. 2023 பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பொங்கலுக்கு விஜய் நடிக்கும் 'வாரிசு' படமும் வெளியாக உள்ளது. அப்படத்தை விஜய்யின் 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த, விஜய்யின் 67வது படத்தைத் தயாரிக்க உள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு படத்தை வெளியிடுகிறதென்றால் அதற்குப் போட்டியாக வேறொரு நடிகரின் படத்தை வெளியிடுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் கிடைப்பது அரிதானது.
பொதுவாக தமிழக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் அஜித்தின் படங்களை விட விஜய்யின் படங்களுக்குத்தான் எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகம் இருக்கும். இந்நிலையில் 'துணிவு' படத்திற்குப் போட்டியாக 'வாரிசு' படத்திற்கு அதிக தியேட்டர்களை எப்படி படத்தை வினியோகிப்பவர் வாங்கப் போகிறார் என்பதை திரையுலகில் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
இந்த விவகாரம் விரைவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.