ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் |

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. அசத்தலான மேக்கிங் என ரசிகர்களால் பாராட்டப்பட்டாலும் யு-டியூபில் டிரைலர் பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை.
விஜய் நடிப்பில் வெளிவந்த 'லியோ' பட டிரைலர் யு டியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 31 மில்லியன் சாதனைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'விடாமுயற்சி' டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' பட டிரைலர் 24 மணி நேரத்தில் பெற்ற 24 மில்லியன் பார்வைகளில் பாதியைக் கூட 'விடாமுயற்சி' டிரைலர் பெறாமல் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
பொங்கல் விடுமுறையில் ரசிகர்கள் டி டியூப் பக்கம் போகவில்லையா அல்லது 'ஆர்கானிக்' ஆக மட்டுமே இதன் பார்வைகள் வந்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர்களின் வரிசையில் 'விடாமுயற்சி' டிரைலர் 9 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்று 15வது இடத்தில் உள்ளது.
அஜித்தின் 'வலிமை' டிரைலர் கூட 24 மணி நேரத்தில் 11 மில்லியன் பார்வைகளைப் பெற்றது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.