சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
2025ம் ஆண்டு ஆரம்பமான பின் அமெரிக்காவில் தமிழ்ப் படங்கள் எதுவும் ஒரு மில்லியன் டாலர் வசூலை இதுவரை கடக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் 40 படங்கள் வரை வெளிவந்துவிட்டன. அவற்றில் 'விடாமுயற்சி' படம் மட்டும் வெளியான முதல் வார இறுதியில் 8 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடி. முதல் வார இறுதியில் மட்டும்தான் இப்படத்திற்கு வரவேற்பு இருந்தது. அதன்பின் வசூல் அதிரடியாகக் குறைந்துவிட்டது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது. அமெரிக்காவில் மூன்று நாட்களில் மட்டும் 6,50,000 யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். 'விடாமுயற்சி' வசூலுடன் ஒப்பிடும் போது இதுவும் சிறந்த வசூல்தான். இந்த வார இறுதியிலும் இப்படத்திற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். 'விடாமுயற்சி' வசூலை முறியடித்து ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை 'டிராகன்' படம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் 'டிராகன்' படம் 50 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூல் கடந்துவிடும் என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.