ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா | வார் 2 படத்தில் சர்ப்ரைஸ் பாடல் | இயக்குனர் ஆகிறார் ரோபோ சங்கர் | அப்பா பற்றி ரஜினி சொன்னதை வெளியில் சொல்ல மாட்டேன் : கமல் மகள் ஸ்ருதி | பேய் கதையில் இரண்டு நாயகிகள் |
சமூக வலைத்தளங்களில் நேற்று இரண்டு மலையாள நடிகைகள் திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கும் நித்யா மேனன், பார்வதி திருவோத்து இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுதான் பரபரப்புக்குக் காரணம். இருவரும் பாசிட்டிவ் எனக் காட்டும் 'பிரக்னன்சி டெஸ்ட் கிட்', பேபி சூத்தர்” ஆகியவை இருக்கும் புகைப்படத்துடன் “ஆக, ஆச்சரியம் தொடங்குகிறது,” எனப் பதிவிட்டனர்.
திடீரென அந்தப் பதிவுகளைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் தாய்மை அடைந்துள்ளதாக நினைத்து அதிர்ச்சியடைந்து பல்வேறு கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வந்தார்கள். அதன் பிறகுதான் அது ஒரு மலையாளப் படத்திற்கான விளம்பர யுத்தி எனத் தெரிய வந்தது.
'பெங்களூரு டேஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கத்தில் நித்யா மேனன், பார்வதி திருவோத்து, பத்மப்ரியா, அம்ருதா சுபாஷ், அர்ச்சனா பத்மினி மற்றும் பலர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அதற்காகத்தான் இப்படி விளம்பரப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்களாம். படத்திற்கு 'வொண்டர் உமன்' எனப் பெயரிட்டுள்ளார்கள்.
தாய்மை அடைந்திருக்கும் பல பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இந்தப் படம் பேசப் போகிறதாம். ஏற்கெனவே, நயன்தாரா, விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட வாடகைத் தாய் விவகாரம் ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்றைய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. அதோடு, சமந்தா நடித்து அடுத்த மாதம் வெளிவர உள்ள 'யசோதா' படத்தின் டிரைலரும் வாடகைத் தாய் விவகாரத்தை பேசும் படமாக இருக்கும் என அதன் டிரைலர் மூலம் தெரிகிறது. 'வொண்டர் உமன்' படமும் பரபரப்பை ஏற்படுத்தும் படமாக அமையலாம்.