முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை |
விமான பணிப்பெண்ணாக இருந்து நடிகை ஆனவர் அஞ்சலி நாயர். நெடுநெல்வாடை, டாணாக்காரன், சமீபத்தில் வெளிவந்த காலங்களில் அவள் வசந்தம் படங்களில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. தற்போது இரண்டு தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
அஞ்சலி நாயர் மற்ற நடிகைகளிடமிருந்து சற்று வித்தியாசமானவர். அவரது குடும்பம் ராணுவ குடும்பம் என்பதால் எதையும் துணிச்சலாக பேசவும், செய்யவும் கூடியவர். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது பெயருக்கு பின்னால் இருக்கும் நாயர் என்ற ஜாதி பெயரை விட்டுவிடப்போவதாக அறிவித்திருக்கிறார். அதோடு ஏற்கெனவே நிறைய அஞ்சலிகள் இருக்கிறார்கள். உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று சில இயக்குனர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதற்கு பதிலளித்த அஞ்சலி நாயர், எனது பெற்றோர் வைத்த அழகான பெயரை நான் ஏன் மாற்ற வேண்டும். நிறைய அஞ்சலிகள் இருந்தால் என்னை நெடுநல்வாடை அஞ்சலி என்று அழையுங்கள் என்று கூறியிருக்கிறார்.
தற்போது அவர் தனது கையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத அடையாளங்களை டாட்டூவாக வரைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான் எல்லா மதச் சின்னங்களையும் கையில் டாட்டு ஆக்கியிருக்கிறேன். மதத்தின் பெயரால் நாம் என்றைக்குமே பிளவுபட்டிருக்கக்கூடாது. மதம் நாமே உருவாக்கிக் கொண்டது. கடவுள் உருவாக்கியது அல்ல. கடவுள் நம் அனைவரையும் அவரது குழந்தையாகத்தான் பார்க்கிறார். அப்படியிருக்கும்போது மதத்தின் பெயரால் வேற்றுமை பேசுவது கடவுளுக்கே எதிரானது. மதம் பற்றிய எனது புரிதல் இதுதான். என்று கூறியிருக்கிறார்.