'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

தமிழ் எக்ஸாடிக் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரித்துள்ள படம் 'ஐமா'. யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன், சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கி உள்ளார். கே.ஆர்.ராகுல் இசை அமைத்துள்ளார், விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராகுல்.ஆர்.கிருஷ்ணா கூறியதாவது: இது சர்வைவல் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்று பொருள்.
எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் படம். பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டு வந்துள்ளேன். படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. 9 கதாபாத்திரங்களை சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது. என்றார்.