சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

டாப் ஹீரோயின்கள் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் காலம் இது. காரணம் 30 நாள் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் படத்திற்கு வாங்கும் சம்பளத்தில் பாதியை 3 நாள் ஆடும் குத்தாட்டத்துக்கு வாங்குவது தான். குறைந்த உழைப்பு, நிறைய சம்பளம் என்பதால் ஒரு சில நடிகைகள் தவிர மற்றவர்கள் குத்தாட்டத்துக்கு ரெடி.
இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு படி முன்னால் இருக்கிறார். பாலிவுட்டில் பிசியாக இருந்தபோதும் இமேஜ் பார்க்காமல் சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு காரணம் அவருக்கு கொடுக்கப்பட்ட கணிசமான சம்பளம்.
ஊர்வசி இப்போது ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். ஏற்கெனவே சில படங்களில் குத்தாட்டம் போட்ட ஊர்வசி, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் வால்டர் வீரய்யா படத்தில் குத்தாட்டம் போட இருக்கிறார். போயபதி இயக்கத்தில் ராம் பொத்தனேனி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆடி முடித்து விட்டார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் ஆட ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழிலும் சில படங்களில் ஆடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.