2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கிறார்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இன்று(நவ.,5) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கும் 20வது படமாகும். 5 ஹிந்தி படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ரஜினி கடைசியாக 2011ம் ஆண்டு வெளிவந்த ரா ஒன் என்ற படத்தில் எந்திரன் படத்தில் தான் நடித்திருந்த சிட்டி கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு மகள் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இதற்கு முன் ரஜினி தமிழில் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்கள் வருமாறு: பாவத்தின் சம்பளம், தாயில்லாமல் நானில்லை, நட்சத்திரம், நன்றி மீண்டும் வருக, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், யார், கோடை மழை, மனதில் உறுதி வேண்டும், பெரிய இடத்து பிள்ளை, வள்ளி. தமிழில் கடைசியாக சிறப்பு தோற்றத்தில் நடித்த படம் வள்ளி. பெரும்பாலான படங்களில் ரஜினி நடிகர் ரஜினியாகவே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.