இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் மோஷன் கேப்சரிங் படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆனால், அதில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகளின் தரம் மிகவும் மோசமாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சில சர்ச்சைகளையும் அந்த டீசர் உருவாக்கியது.
ஜனவரி 12, 2023 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, படம் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் 16ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
“ஆதி புருஷ்' ஒரு படம் மட்டுமல்ல. பிரபு ஸ்ரீராம் மீதான நமது பக்தியை சித்தரிப்பதும், நமது வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றின் அர்ப்பணிப்பும் சார்ந்தது. ரசிகர்களுக்கு முழுமையான விஷுவல் அனுபவத்தைக் கொடுக்க, அவர்களுக்கு இன்னும் அதிகமான நேரத்தைக் கொடுக்க வேண்டி உள்ளது. ஆதி புருஷ் ஜுன் 16, 2023ம் தேதியன்று வெளியாகும். இந்தியா பெருமைப்படும் விதமாக ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது அர்ப்பணிப்பாக உள்ளது. உங்கள் ஆதரவு, அன்பு, ஆசீர்வாதம் ஆகியவைதான் எங்களை தொடர வைக்கிறது,” என படத்தின் இயக்குனர் ஓம் ராவத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.