பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தும், சில படங்களை இயக்கியும் உள்ள அர்ஜுன், அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு புதிய படம் ஒன்றிற்கு பூஜை போட்டார். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க 'ஹிட்' படத்தின் கதாநாயகன் விஷ்வக் சென் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
கேரளாவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க அர்ஜுன் உள்ளிட்ட படக்குழு தயாராக இருந்த போது அப்படப்பிடிப்பில் விஷ்வக் சென் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன், விஷ்வக் சென் மீது குற்றம் சாட்டியிருந்தார். ஈடுபாடு இல்லாமல், தொழில் ரீதியாக நேர்மையாக இல்லாமல் இருக்கிறார் விஷ்வக் சென் என்பது அர்ஜுனின் குற்றச்சாட்டு.
நேற்று நடைபெற்ற 'ராஜயோகம்' என்ற தெலுங்குப் பட விழாவில் அது குறித்து விஷ்வக் சென் பதிலளித்தார். “படத்தின் முதல் பாதிக்கான ஸ்கிரிப்ட் படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு வந்தது. எனக்கான ஒரு இடத்தையும், சுதந்திரத்தையும், ஆலோசனைகளை ஏற்பதையும் மறுத்தார் அர்ஜுன். என்ன சொன்னாலும் என்னை சமாதானப்படுத்துவதிலேயே இருந்தார். படப்பிடிப்புக்குச் சென்றால் அது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று செல்லவில்லை.
நான் படத்திலிருந்து விலகிவிட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், அர்ஜுன் சில விஷயங்களை விவாதிக்க வேண்டும். அது குறித்து அவரது குழுவிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. அதே சமயம் எனக்குத் தந்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்டார்கள். இது குறித்து நான் அமைதியாக இருக்கலாம் என்றுதான் இருந்தேன். இருப்பினும் என்னைப் பற்றி சர்ச்சை வந்ததால் இது குறித்து பேச வேண்டியதாகிவிட்டது. எனக்கு அர்ஜுனை அவமானப்படுத்தும் எண்ணமில்லை, படத்தின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே சொன்னேன்,” எனப் பேசியுள்ளார்.