தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சித்ஸ்ரீராம். இவர் கோவையில் நவ., 27ம் தேதி இன்னிசை நிகழ்ச்சியை வழங்க உள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6மணிக்கு நிகழ்ச்சி துவங்கி சுமார் 3மணி நேரம் நடைபெற உள்ளது. சித்ஸ்ரீராமுடன் அவரின் இசை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது. இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் 'பேன் பிட்' இடம்பெறுகிறது. சுமார் 10,000 பேர் நிற்க கூடிய வகையில் அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீராம் உரையாடல் இடம் பெற உள்ளது.
அன்னபூர்ணா மசாலா இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது. மேலும் அருண் ஈவென்ட்ஸ், வி 2 கிரியேஷன்ஸ் மற்றும் வீ.எம்.ஆர் குரோபக்ஸ் ஆகியோருடன் தினமலர் நாளிதழும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் அறிமுக விழா கோவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் PAYTM INSIDER, BOOK MY SHOW, VMR GROBUX, ரோட்டரி கேலக்ஸ்சி சங்கத்தில் கிடைக்கும். அத்துடன் அன்னபூர்ணா ஆனந்தாஸ் ஆகிய பிரபல உணவகங்களில் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வு நடைபெறும் கொடிசியா வளாகத்திலும் நேரடியாக சென்று டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களே சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா... அப்புறமென்ன உடனே டிக்கெட்டுகளை புக் செய்யுங்கள்.