கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் உருவாக்கிய கவிதாலயா நிறுவனம் ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்துடன் முதல் தயாரிப்பை 1981ல் துவங்கியது. அதன்பிறகு ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வந்த இந்த நிறுவனம் கடந்த 2008-ல் குசேலன் மற்றும் அர்ஜுன் நடித்த திருவண்ணாமலை ஆகிய படங்களைத் தயாரித்ததுடன் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி விட்டது. குறிப்பாக இயக்குனர் பாலசந்தரின் மறைவுக்கு பிறகு இனி படத்தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபடப் போவதில்லை என்பது போன்றே சொல்லப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வெப்சீரிஸ் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது கவிதாலயா நிறுவனம். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் திரையுலகம் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி உள்ள கவிதாலயா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கான இன்று இந்த படம் துவக்க விழா பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.
இந்த படத்தை இயக்குனரும் நடிகருமான உதய் மகேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நட்டி நட்ராஜ் நடித்த நாளை மற்றும் சக்கர வியூகம் ஆகிய படங்களை உதயபானு மகேஸ்வரன் என்கிற பெயரில் இயக்கியவர். அதன்பிறகு நடிகராக மாறி இது நம்ம ஆளு, கபாலி, இமைக்கா நொடிகள், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். இந்தநிலையில் இந்த படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பியுள்ளார் உதய் மகேஷ்.
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அனாஸ்வர ராஜன் நடிக்கிறார்.. ஒரு முக்கிய வேடத்தில் டேனியல் போப் நடிக்கிறார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஹிருதயம் படத்திற்கு இசையமைத்த ஹேசம் அப்துல் வகாப் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாள நடிகையான இவர் திரிஷா நடித்துள்ள ராங்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளிவர வேண்டி உள்ளது. தற்போது ஜிவி பிரகாஷ் ஜோடியாகி உள்ளார்.