இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களின் முதல் சிங்கிள் பாடல், அல்லது மற்ற பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யு-டியுபில் பெரிய சாதனையைப் படைக்கும். அவரது படங்களின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உண்டு. அவரது புதிய படங்களின் பாடல்கள் அவருடைய முந்தைய பட பாடல்களின் சாதனைகளை எப்படியும் முறியடித்துவிடும்.
ஆனால், 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக சமீபத்தில் வெளிவந்த 'ரஞ்சிதமே' பாடல் முந்தைய சாதனைகளை முறியடிக்காமல் பின் தங்கிவிட்டது. 'ரஞ்சிதமே' பாடல் 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும் 1.3 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றது.
இதற்கு முன்பு இந்த ஆண்டில் வெளிவந்த 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளையும், 2.2 மில்லியன் லைக்குகளையும் பெற்று அப்போது புதிய சாதனையைப் படைத்தது. அந்த சாதனையை 'ரஞ்சிதமே' பாடலால் முறியடிக்க முடியவில்லை.
விஜய் நடிக்கும் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. எனவே, இந்த 'ரஞ்சிதமே' புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றமே. இருந்தாலும் தற்போது 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து, யு டியூபில் இன்னமும் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது இந்தப் பாடல். அடுத்து வெளிவர உள்ள பாடல்கள் புதிய சாதனையைப் படைக்கும் என்ற நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.