திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
2022ம் ஆண்டில் ஏஆர் ரஹ்மான் இசையில் இதுவரையில் “இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக ரஹ்மான் இசையமைத்த எந்த ஒரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஒரே ஆண்டில் ரஹ்மான் இசையில் 4 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 'வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களின் பாடல்கள், பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் படங்களின் வெற்றிக்கு ரகுமானின் இசையும் ஒரு காரணம் என்பதை ரசிகர்களும் சொன்னார்கள். அந்த இரண்டு படங்களிலும் பின்னணி இசையும் பெரிதாகப் பேசப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக பாடல்களை வெளியிடுவது போல பின்னணி இசையையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் 'வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களின் பின்னணி இசையையும், ஏஆர் ரகுமான் தயாரித்த '99 சாங்ஸ்' படத்தின் பின்னணி இசையையும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாக ரகுமான் டுவிட்டரில் அறிவித்துள்ளார். அது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.