'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! |

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று விட்டதாக இயக்குனர் நெல்சன் ஒரு தகவல் கொடுத்து இருக்கிறார்.
அதோடு இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களை விட இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த படங்களை விட இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ள நெல்சன், இந்த ஜெயிலர் படத்தில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரஜினியை பார்க்கலாம் . அதேபோல் கதைக்களமும் வித்தியாசமாகவும் சீன் பை சீன் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்க வகையிலும் திரைக்கதை அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன்.