தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன் படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள அவரது 46வது படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்க, பிக்பாஸ் ஷிவானி, குக் வித் கோமாளி புகழ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.
இப்படத்திற்கு விரிச்சன், டிஎஸ்பி உள்பட பல டைட்டில்களை பரிசீலித்து வந்த இயக்குனர் பொன்ராம், தற்போது டிஎஸ்பி என்று பெயர் வைத்து போஸ்டரை வெளியிட்டுள்ளார். சேதுபதி படத்திற்குப் பிறகு இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவர் டிஎஸ்பி உடையில் கம்பீரமாக பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் ஒரு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், வாழ்த்துக்கள் மை ஹீரோ. உங்களை போலீஸ் உடையில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருக்கிறார்.