துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
காஞ்சனா- 3 படத்தை அடுத்து ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி- 2, துர்கா என ராகவா லாரன்ஸின் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில் ருத்ரன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரமுகி- 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதிகாரம் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நயன்தாராவின் 81 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதோடு, ராகவா லாரன்ஸும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.