தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதேசமயம் அந்த படம் அதிக நேரம் ஓடும் விதமாக எடுக்கப்பட்டிருந்ததால் படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதை அந்தப்படத்துடன் முடிவடைந்துவிட்டது. இருந்தாலும் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எப்போது என பல நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட ராஜமவுலி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, இதைப்பற்றி என்னால் இப்போது எந்த தகவலும் சொல்ல முடியாது. என்னைவிட இந்த படத்தின் கதாசிரியரான எனது தந்தை விஜயேந்திர பிரசாத் சொன்னால் தான் சரியாக இருக்கும். அவர் தான் தற்போது அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் தற்போது கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஒரு வழியாக இந்த இரண்டாம் பாகத்திற்கான கதைக்களத்தை பிடித்து விட்டோம் என்று கூறியுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. அந்தவகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற தகவலுடன் விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.