முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

இந்திய சினிமாவின் மிகவும் பழமையான ஸ்டுடியோக்களில் ஒன்று தமிழகத்தை சேர்ந்த ஏவிஎம். பல சினிமா ஜாம்பவான்களை தந்த இந்த ஸ்டுடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டது. மீதமிருந்த இடங்களில் தியேட்டர்கள், ஸ்டுடியோக்கள் செயல்பட்டு வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரும் மூடப்பட்டது. அதையடுத்து அந்த இடம் புதுபிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இடத்தில் திருமணம், படப்பிடிப்பு, பட பூஜை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் புதுபொலிவுடன் தயாராகி உள்ளது. சுமார் 7200 சதுர அடியில் ரூம், ஹால் போன்றவை தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் இப்போது திருமணம் தொடர்பான நிகழ்வுகளும் நடைபெற இருக்கிறது. அதற்கான புக்கிங்கும் செய்து வருகின்றனர். இப்போதைக்கு தமிழகத்தில் படப்பிடிப்பு மற்றும் சினிமா தொடர்பான விழாக்களுக்கு ஒரு சில இடங்களே உள்ளன. தற்போது ஏவிஎம் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த வளாகம் பிசியாகும் என்று நம்பலாம்.