சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

என்றும் இளமை என்று சொல்வதற்கு ஏற்ற தகுதியுடைய சில நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நதியா. எண்பதுகளின் இறுதியில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த இவர் இப்போதும் கூட ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருக்கிறார். அவ்வப்போது சில படங்களில் நடித்தும் வருகிறார். கடந்த சில வாரங்களாகவே ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நதியா. நேற்று புத்தாண்டை முன்னிட்டு அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்ற போது அங்கே எதிர்பாராத விதமாக வருகை தந்த தனது பேவரைட் ஆஸ்திரேலியா நடிகையான நிக்கோல் கிட்மேனை சந்தித்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவரைத் தேடிச்சென்று தன்னை அவரது தீவிர ரசிகை என அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடன் பேசி மகிழ்ந்துள்ள நதியா. ஆர்வமாக அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நதியா, ‛‛என்னுடைய உயரத்திற்கு ஏற்றவாறு அவர் வளைந்து கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.