இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் 'ஆர்ஆர்ஆர்'.
ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆகியுள்ளது.
ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு…) நாமினேஷனிலும் பங்கேற்கிறது. இது பற்றி அறிவிப்பை அந்த விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
'ஆர்ஆர்ஆர்' படம் 'கோல்டல் குளோப்' விருதுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளதால் படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் ராஜமவுலி, “கோல்டன் குளோப் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படத்தை இரண்டு பிரிவுகளில் நாமினேஷன் செய்துள்ள தேர்வுக் குழுவுக்கு நன்றி, மொத்த குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். தொடர்ந்து ஆதரவையும், அன்பையும் அளித்து வரும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி” என டுவீட் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை இயக்குனர் ராஜமவுலிக்கும் படக்குழுவினருக்கும் தெரிவித்துள்ளார்கள்.